இந்தியா

“கோவாக்சின் திடீர் பற்றாக்குறைக்கு இதுதான் காரணம்” : போட்டு உடைத்த டாக்டர் அரோரா!

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதற்கு என்ன காரணம் என டாக்டர் அரோரா விளக்கமளித்துள்ளார்.

“கோவாக்சின் திடீர் பற்றாக்குறைக்கு இதுதான் காரணம்” : போட்டு உடைத்த டாக்டர் அரோரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காதற்கு என்ன காரணம் என கோவிட் பணிக்குழு உறுப்பினர் டாக்டர் அரோரா விளக்கமளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றை முற்றிலும் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக கோவாக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. கோவாக்சின் முதல் டோஸ் போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் கிடைக்காமல் அல்லலுற்றனர்.

இந்நிலையில், கோவாக்சினின் பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியான தடுப்பூசிகள் சரியான தரத்தில் இல்லாததாலேயே பற்றாக்குறை ஏற்பட்டதாக கோவிட் பணிக்குழு உறுப்பினர் டாக்டர் அரோரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த டாக்டர் அரோரா, “தடுப்பூசி உற்பத்தி கிட்டத்தட்ட ராக்கெட் சயின்ஸ் போன்றது. கோவாக்சின் உற்பத்தியில் மிகப்பெரிய உயர்வை எதிர்பார்த்தோம்.

“கோவாக்சின் திடீர் பற்றாக்குறைக்கு இதுதான் காரணம்” : போட்டு உடைத்த டாக்டர் அரோரா!

பாரத் பயோடெக் பெங்களூரில் ஒரு புதிய உற்பத்தியை தொடங்கியது. மொத்த உற்பத்தியை அதிகரிக்க கூடுதலாக மூன்று பொதுத்துறை நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுகின்றன. பாரத் பயோடெக்கிலிருந்து 10 முதல் 12 கோடி டோஸ் எதிர்பார்க்கிறோம்.

பெங்களூரு ஆலை உலகளவில் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் ஆலைகளில் ஒன்றாகும். ஆனால் ஆரம்ப தொகுப்புகள் சில தரநிலையை பூர்த்தி செய்யவில்லை. அது சரியான தரத்தில் இல்லை. சரியான தரத்தில் இல்லாத தொகுப்புகள் தடுப்பூசி திட்டத்தில் பயன்படுத்தப்படவில்லை.

மூன்றாவது மற்றும் நான்காவது தொகுப்புகள் இப்போது முன்னேறியுள்ளன. அடுத்த நான்கு அல்லது ஆறு வாரங்களில் கோவாக்சின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories