இந்தியாவில் கொரோனா பரவலில் இரண்டாவது அலையின் போது எவரும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக உயிரிழக்கவில்லை என நாடாளுமன்றத்தில் ஒன்றிய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி ப்ரவீன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு கடுமையான கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளது.
உலகில் மனிதாபிமானமே இல்லாதவர்கள் கூட டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இரண்டாவது அலையின் போது நாள்தோறும் நிகழ்ந்த மரண காட்சிகளை கண்டு கண்கலங்காதவரே இருக்க முடியாது.
அப்படி இருக்கையில் துளியளவும் குற்றவுணர்ச்சியே இல்லாமல் எவருமே உயிரிழக்கவில்லை எனக் கூறிய ஒன்றிய இணையமைச்சரை கடுமையாக சாடியுள்ளார் சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத்.
அதில், “அமைச்சர் பாரதி ப்ரவீனின் பேச்சைக் கேட்டு வாயடைத்து போயிருக்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாருமே பலியாகவில்லை என்பதை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கேட்டால் என்ன ஆவார்கள்? ஒன்றிய மோடி அரசு பச்சையாக பொய் சொல்கிறது.
அரசின் மீது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வழக்குத் தொடர வேண்டும். ஒன்றிய அரசை நீதிமன்றத்திற்கு இழுத்துச் சென்று நீதி கேட்க வேண்டும். ” என ஆவேசமாக பேசியுள்ளார்.