இந்தியா

"வரதட்சணையே வேண்டாம்"... 50 சவரன் நகைகளைப் திருப்பி கொடுத்த மணமகன்: கேரள இளைஞருக்குக் குவியும் பாராட்டு!

கேரள மாநிலத்தில், மணமகன் திருமணம் முடிந்ததும் மணப்பெண் அணிந்திருந்த நகைகளை, பெண் வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்.

"வரதட்சணையே வேண்டாம்"... 50 சவரன் நகைகளைப் திருப்பி கொடுத்த மணமகன்: கேரள இளைஞருக்குக் குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரள மாநிலத்தில் அன்மையில், வரதட்சணை கொடுமையால் இளம்பெண்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்கள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விஷ்மாயா என்ற மருத்துவக் கல்லூரி மாணவி, நல்ல கார் வாங்கி கொடுக்காததால் கணவன் கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

அதேபோல், அர்ச்சனா என்ற பெண் அதிகமாக வரதட்சனை கேட்டு கணவன் வீட்டார் கொடுமை தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும் சுசித்திரா என்ற பெண்ணும் வரதட்சனை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த மூன்று சம்பவங்களும் கேரள மாநிலத்தையே உலுக்கியது.

இந்நிலையில், சதீஷ், சுருதி தம்பதிகளுக்குத் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பே சதீஷ் பெண் வீட்டாரிடம் வரதட்சனை வேண்டாம், உங்கள் மகளை மட்டும் அனுப்பி வைத்தால் போதும் என தெரிவித்துள்ளார்.

ஆனால், பெண் பெற்றோர் தனது மகளுக்கு திருமணத்தன்று சீதனமாக 50 சவரன் நகைகளை அணிந்தபடி மணமேடைக்கு அனுப்பினர். இதைக் கண்ட சதீஷ் திருமணம் முடிந்த உடன் நகைளை அனைத்தும் கழிட்டி கொடுத்துவிட வேண்டும் என சுருதியிடம் கூறியுள்ளார்.

"வரதட்சணையே வேண்டாம்"... 50 சவரன் நகைகளைப் திருப்பி கொடுத்த மணமகன்: கேரள இளைஞருக்குக் குவியும் பாராட்டு!
Kalaignar TV

இதையடுத்து திருமணம் முடிந்த பிறகு சுருதி அணிந்திருந்த அனைத்து நகைகளையும் கழித்து திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் முன்னிலையில் அவரின் பெற்றோரிடம் சதீஷ் ஒப்படைத்தார். சதீஷின் இந்த செயலை கண்டு அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

கேரளாவில் வரதட்சனை கொடுமையால் தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்த சிலையில், கட்டிய தாலியுடன் மணப்பெண் ஸ்ருதியை மனைவியாக ஏற்றுக்கொண்ட மணமகன் சதீஷின் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.

banner

Related Stories

Related Stories