இந்தியா

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை” : உத்தரகாண்ட் பா.ஜ.க MLA மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

உத்தரகாண்ட் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை” : உத்தரகாண்ட் பா.ஜ.க MLA மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்குவதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இப்படியான நடவடிக்கையில் சிக்கி வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் நேற்று சொகுசு விடுதியில் மது விருந்து மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் பா.ஜ.கவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரே புகார் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், ஹரித்வார் மாவட்டத்தின் பஹத்ராபாத்தில் உள்ள ஜ்வாலாபூரைச் சேர்ந்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர். இவர் மீது பேகம்புரா கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் நிர்வாக ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 'சில மாதங்களுக்கு முன்னர் சுரேஷ் ரத்தோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியதால் அப்போது நான் புகார் அளிக்க முடியவில்லை' என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

“சொந்த கட்சி பெண்களுக்கே பாலியல் தொல்லை” : உத்தரகாண்ட் பா.ஜ.க MLA மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் ரத்தோர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பஹத்ராபாத் காவல்நிலைய அதிகாரி மகேந்திர புன்திர் தெரிவித்துள்ளார்.

இந்த புகாரைத் தொடர்ந்த, என்னை ஆரம்பத்தில் மிரட்டிய சமூக விரோதிகள் என் மீது தவறாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. என் மீது தொடரப்பட்ட வழக்குகள் ஆதாரமற்றவை என பா.ஜ.க எம்.எல்.ஏ சுரேஷ் ரத்தோர் விளக்கம் கொடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories