இந்தியா

“ஒரே பல்பு.. ஒரு ஃபேன்.. மின்கட்டணம் ரூ.2.5 லட்சம்” : ஷாக்கான மூதாட்டி - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!

மத்திய பிரதேசத்தில் மூதாட்டியின் வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“ஒரே பல்பு.. ஒரு ஃபேன்.. மின்கட்டணம் ரூ.2.5 லட்சம்” : ஷாக்கான மூதாட்டி - பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் அவலம்!
DIGI TEAM 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மத்திய பிரதேச மாநிலம், குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம் பாய் பிரஜாபதி. இவர் வீட்டு வேலைகள் செய்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் டேபிள் ஃபேன் மட்டுமே உள்ளது.

இந்நிலையில், மூதாட்டியின் வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சம் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என மின் ஊழியர்கள் கொடுத்த ரசீதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். மேலும் அவர்களிடம், மாதம் ரூபாய் 300 முதல் 500 வரை தான் கட்டணம் வரும். இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் சரியான பதில் சொல்லாமல் அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர், ராம் பாய் பிரஜாபதி மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்று முறையிட்டுள்ளார். ஆனால் யாரும் அவருக்கு சரியாக பதில் கூறவில்லை. மேலும் கடந்த ஏழு நாட்களாக மின்வாரிய அலுவலகத்திற்கும், வீட்டிற்குமாக நடையாக நடந்து வருகிறார் மூதாட்டி. அப்போது கூட அவருக்கு எந்த ஒரு அதிகாரியும் உதவ முன்வரவில்லை.

இதுகுறித்து மூதாட்டி கூறுகையில், "எனது வீட்டில் ஒரு விளக்கு மற்றும் டேபிள் மின்விசிறி மட்டுமே உள்ளது. ஆனால் எனது வீட்டிற்கு ரூபாய் 2.5 லட்சமாக மின் கட்டணம் வந்துள்ளது. இதுகுறித்துக் கேட்டுக் கடந்த பல நாட்களாக மின்சாரத் துறை அலுவலகத்திற்கு வந்து செல்கிறேன். ஆனால் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இவ்வளவு பெரிய தொகையை என்னால் கட்ட முடியாது. எனவே எனக்கு அரசு உதவி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories