இந்தியா

“கொரானா மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்குமா?” : டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!

குழந்தைகளை மூன்றாவது அலை கடுமையாக பாதிக்கும் என்பதற்கான தரவுகள் இல்லை என டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

“கொரானா மூன்றாம் அலை குழந்தைகளை கடுமையாக பாதிக்குமா?” : டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மூன்றாம் அலை வரும் என மருத்துவர்களும், உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மூன்றாம் அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் பீதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் மூன்றாவது அலை குழந்தைகளைத் தாக்குவதற்கான எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லை என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்தீப் குலேரியா," இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 60 முதல் 70 சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்கனவே இணை நோய்கள் இருந்துள்ளன. மேலும் வீடுகளிலேயே கொரோனா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்குக் குறைந்த அளவிலான பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. இவர்கள் யாரும் மருத்துவமனைக்கு வராமலேயே குணமடைந்துள்ளனர்.

எனவே, கொரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. முதல் இரண்டு அலைகளின் போதும் கிடைத்த தரவுகள் ஆய்வு செய்ததில் பெரிய அளவில் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

இந்தியாவில் கிடைத்த தகவல்கள் மட்டுமல்ல, உலகின் பல இடங்களில் கிடைத்த தரவுகளை நாங்கள் ஆராய்ந்துவிட்டோம். இதில் குழந்தைகளை மூன்றாம் அலை அதிகம் தாக்குவதற்கான எந்த தரவுகளும் இல்லை" என்றார்.

banner

Related Stories

Related Stories