இந்தியா

“இத்தனை உயிரிழப்புக்கும் மோடி அரசே முழுமுதற் காரணம்” - பிரபல மருத்துவ இதழ் கடும் விமர்சனம்!

இந்தியாவின் மோடி அரசு கொரோனாவை சரிவர கையாளவில்லை என புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ விமர்சித்துள்ளது.

“இத்தனை உயிரிழப்புக்கும் மோடி அரசே முழுமுதற் காரணம்” - பிரபல மருத்துவ இதழ் கடும் விமர்சனம்!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அதை இந்திய அரசு முறையாகக் கையாளவில்லை என புகழ்பெற்ற மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ விமர்சித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவல் குறித்து மத்திய அரசுக்கு மருத்துவர்களும், ஆராய்ச்சியாளர்களும் எச்சரிக்கை விடுத்தும், கண்டுகொள்ளாமல் இருந்து பெரும் இழப்புக்கு அரசே காரணமாகியிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாட்டில் மத்திய அரசின் தோல்வி குறித்து மருத்துவ ஆய்வு இதழான ‘தி லான்செட்’ தனது தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:

“இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை உருவாகும் எனப் பலமுறை மருத்துவ வல்லுநர்கள் எச்சரி்த்தும் அதை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. ஐ.சி.எம்.ஆர் நடத்திய ஆய்வில் இ்ந்தியாவில் 21 மக்களே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்ப்ரெட்டர் எனப்படும் கும்பமேளா, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்த அனுமதித்ததும், கொரோனாவை கட்டுப்படுத்த போதுமான தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து எடுக்காததற்கும் மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி செலுத்துவதும் மிகவும் மெதுவாகவே நடந்தது, இதுவரை 2 சதவீதத்துக்கும் குறைவான மக்களுக்கே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன் அளி்த்த பேட்டியில், “கொரோனா வைரஸ் பெருந்தொற்று இந்தியாவில் முடிவும் நிலையில் இருக்கிறது” எனத் தெரிவி்த்தார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உருவாகும், வைரஸ் உருமாற்றம் அடைந்து பரவக்கூடும் என எச்சரித்த போதிலும்கூட, இந்தியாவில் கொரோனா வைரஸ் தோற்கடிக்கப்பட்டதாக மத்திய அரசு கருதியது” என விமர்சித்துள்ளது.

banner

Related Stories

Related Stories