இந்தியா

கதவைத் தட்டிய அதிகாரிகள்; லஞ்சப் பணம் 5 லட்சத்தைக் கொளுத்தி கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தார்!

தெலங்கானாவில் லஞ்ச ஒழிப்புத்துறைக்குப் பயந்து ரூபாய் 5 லட்சத்தை தாசில்தார் தீயிட்டு கொளுத்தினார்.

கதவைத் தட்டிய அதிகாரிகள்; லஞ்சப் பணம் 5 லட்சத்தைக் கொளுத்தி  கையும் களவுமாக பிடிபட்ட தாசில்தார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலங்கானா மாநிலம், கர்னூல் மாவட்டம் எல்.பி நகரில் தாசில்தாராக பணியாற்றி வருபவர் வெங்கட கவுடு. கடந்த ஜனவரி மாதம் வெங்கட கவுடுவிடம் அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் குவாரிக்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளார்.

இதையடுத்து வெங்கட கவுடு, அந்த நபரிடம் குவாரிக்கு அனுமதிக்க வேண்டும் என்றால் ரூபாய் 6 லட்சம் லஞ்சமாக வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர், லஞ்சம் கொடுக்க விரும்பாத, அந்த நபர் இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அறிவுரைப்படி தாசில்தார் வெங்கட கவுடுவின் வீட்டிற்குச் சென்று 5 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார்.

அப்போது, வீட்டிற்கு வெளியே காத்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். வெளியே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருப்பதை அறிந்த தாசில்தார் வெங்கட கவுடு, உடடினயாக வீட்டின் சமையலறைக்குச் சென்று லஞ்சமாக வாங்கிய ரூபாய் 5 லட்சத்தைத் தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

பின்னர், பாதி எரிந்த நிலையிலிருந்த பணத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள், தாசில்தார் வெங்கட கவுடுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories