இந்தியா

மாஸ்க் தவறுதலாக கழன்று விழுந்ததால் இளைஞரை அடித்து உதைத்த போலிஸார் - இந்தூரில் கொடூரம்!

இந்தூரில் முகக்கவசம் அணியாதவர் மீது போலிஸார் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்க் தவறுதலாக கழன்று விழுந்ததால் இளைஞரை அடித்து உதைத்த போலிஸார் - இந்தூரில் கொடூரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கொரோனா கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்திலும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் இருப்பவர்களைப் பிடித்து சிறையில் அடைக்குமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தூரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ண கெயர் என்பவர், மருத்துவமனையில் இருக்கும் தனது தந்தைக்கு உணவு எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த இரண்டு போலிஸார், ஏன் முகக்கவசம் அணியவில்லை எனக் கேட்டு அவரை காவல்நிலையம் வரும்படி அழைத்துள்ளனர். இதற்கு கிருஷ்ண கெயர், “வரும் வழியில் எனது முகக்கவசம் கீழே விழுந்துவிட்டது. எனது தந்தைக்கு உணவு எடுத்துச் செல்கிறேன். அவருக்கு உணவு கொடுத்துவிட்டு நான் காவல்நிலையம் வருகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த இரண்டு காவலர்களும் அவரை வலுக்கட்டாயமாகக் காவல்நிலையம் வரும்படி, சட்டையைப் பிடித்து இழுத்துள்ளனர். இதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரண்டு போலிஸாரும் சேர்ந்து கிருஷ்ண கெயரை கீழே தள்ளி கடுமையாகத் தாக்கினர். அங்கிருந்த பொதுமக்கள் தடுக்க முயன்றபோதும், போலிஸார் அவரை மீண்டும் மீண்டும் தாக்கினர். இதையடுத்து, கிருஷ்ண கெயரை போலிஸார் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய இரண்டு போலிஸாரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கும்பமேளாவுக்கு லட்சக்கணக்கானவர்களை கங்கை ஆற்றில் குளிக்க அனுமதித்த நாட்டில், மருத்துவமனைக்கு உணவு கொண்டு சென்றவரின் முகக்கவசம் கழன்றதற்கு இப்படியா நியாயம் வழங்குவது என நெட்டிசன்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories