இந்தியா

“துணை ராணுவத்தின் உதவியோடு வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி பா.ஜ.க அராஜகம்” : ஆளுநரிடம் மம்தா புகார்!

மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் மக்களை ஓட்டுப்போட விடாமல் பா.ஜ.கவினர் தடுப்பதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது.

“துணை ராணுவத்தின் உதவியோடு வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி பா.ஜ.க அராஜகம்” : ஆளுநரிடம் மம்தா புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல்கட்டத் தேர்தல் முடிந்த நிலையில் இன்று 30 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்டத் தேர்தலில் எப்படி பா.ஜ.கவினர் அராஜகமாக நடந்துகொண்டார்களோ, அதேபோல் இரண்டாம் கட்டத் தேர்தலிலும் நடந்துகொண்டு வருகிறார்கள். இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

நந்திகிராம் தொகுதியில் மம்மா பானர்ஜி போட்டியிடும் நிலையில் அங்கு வன்முறைச் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க சுமார் 20 பாதுகாப்புப் படை குழுக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. மேலும் அங்கு 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நந்திகிராம் தொகுதியில் பலத்த பாதுகாப்பு இருந்தபோதும், வாக்குப்பதிவு துவங்கியதிலிருந்தே பா.ஜ.கவினர் அராஜகத்தை கட்டவிழ்த்துவிட்டனர். பா.ஜ.கவினர் நந்திகிராமில் உள்ள பல வாக்குச்சாவடிகளில் மக்களை ஓட்டுப்போட அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் பல வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றியும் உள்ளனர். இதுதொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவித்தனர்.

“துணை ராணுவத்தின் உதவியோடு வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி பா.ஜ.க அராஜகம்” : ஆளுநரிடம் மம்தா புகார்!

இந்நிலையில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி, போயல் தொடக்கப்பள்ளியில் உள்ள வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்தபோது, அங்கிருந்த பா.ஜ.கவினர் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதனால் திரிணாமுல் தொண்டர்களுக்கும், பா.ஜ.கவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலிஸார் பலரையும் விரட்டியடித்தனர்.

இதையடுத்து, வாக்களித்துவிட்டு அந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க கவர்னர் ஜெகதீப் தங்கரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, பா.ஜ.கவினர் துணை இராணுவப் படை மூலம் மக்களை ஓட்டு போட விடாமல் தடுக்கின்றனர், இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்றும் தயவுசெய்து இங்குள்ள நிலைமையைப் பாருங்கள் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து துணைத் தேர்தல் அதிகாரி சுதீப் ஜெயின் மாவட்ட நிர்வாகத்துக்குப் பிறப்பித்த உத்தரவில், "போயல் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். கேஷ்பூர் பகுதியில் இன்று காலை நடந்த வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அது தொடர்பான விசாரணை அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories