இந்தியா

காட்டுத்தீயாகப் பரவும் கொரோனா தொற்று... சமாளிக்க முடியாமல் திணறும் மகாராஷ்டிரா!

மகாராஷ்டிராவில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா மரணங்கள் ஆயிரத்தைக் கடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காட்டுத்தீயாகப் பரவும் கொரோனா தொற்று... சமாளிக்க முடியாமல் திணறும் மகாராஷ்டிரா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நீடித்து வரும் கொரோனா தொற்று பரவல் கடந்த மாதம் வரை தணிந்து காணப்பட்டது. தற்போது தொற்று பரவல் அதிகரித்து வருவது மக்களை மீண்டும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

அதன்படி நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக கொரோனா தினசரி தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அவ்வகையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கு மேல் பதிவாகிவருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தினமும் 100 என்ற அளவில் பதிவாகி வருகிறது. இது மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுத்தீயாகப் பரவும் கொரோனா தொற்று... சமாளிக்க முடியாமல் திணறும் மகாராஷ்டிரா!

இந்நிலையில், வரும் ஏப்ரல் 4ம் தேதி அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியிருக்கும் என மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது புனேவில் 61 ஆயிரத்து 125 பேரும், நாக்பூரில் 47 ஆயிரத்து 707 பேரும், மும்பையில் 32 ஆயிரத்து 927 பேரும் கொரோனா தொற்று நோய்த்தொற்றுகாக சிகிச்சையில் உள்ளனர்.

அடுத்து வரும், 11 நாட்களில் கொரோனா உயிரிழப்போர் எண்ணிக்கை 64 ஆயிரத்தைத் தொடக்கூடும். நாக்பூர் மற்றும் தானே மாவட்டங்கள் கொரோனா தொற்றால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் வேகமாகப் பரவிவருவதால், கூடுதலாக 4 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் தேவைப்படுகிறது. மகாராஷ்டிராவில் கடந்த நான்கு நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories