இந்தியா

மோடியால் மகிழ்ச்சியை இழந்த மக்கள்... உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 139வது இடத்தில் இந்தியா!

உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து ஐ.நா நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 139வது இடம் கிடைத்துள்ளது.

மோடியால் மகிழ்ச்சியை இழந்த மக்கள்... உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 139வது இடத்தில் இந்தியா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு UNSDSN என்ற அமைப்பு கடந்த சில மாதங்களாக, 2020ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்ற ஒரு ஆய்வை நடத்தியது. 149 நாடுகளைக் கணக்கில் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மக்களின் மகிழ்ச்சியான சூழல், ஜி.டி.பி நிலவரம், சமூக சூழல், ஆதரவு, தனிநபர் சுதந்திரம், ஊழல் ஆகியவை குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டது.

மேலும், ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களை எப்படி மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்பதை மையமாக வைத்தே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இரண்டு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. முதலாவது, கொரோனா தொற்றால் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றியும், இரண்டாவதாக கொரோனா பெருந்தொற்றை தடுக்க ஒவ்வொரு நாட்டு அரசும் எவ்வாறு போராடியது என்பதைக் கருத்தில் கொண்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை UNSDSN வெளியிட்டது. அதன்படி, பின்லாந்து நாட்டு மக்கள்தான் உலகிலேயே அதிக மகிழ்ச்சியாக வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களைப் பெற்றுள்ளன.

மோடியால் மகிழ்ச்சியை இழந்த மக்கள்... உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 139வது இடத்தில் இந்தியா!

இந்த ஆய்வு முடிவில் இந்தியா எத்தனையாவது இடம்பெற்றுள்ளது தெரியுமா? ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 149 நாடுகளில் இந்தியா 139வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆய்வு முடிவின்படி, இந்திய மக்கள் மகிழ்ச்சியற்ற நிலையில் வாழ்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

வல்லரசு நாடான அமெரிக்கா இந்தப் பட்டியலில் 19வது இடத்தை பிடித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு சீனா 94வது இடத்தில் இருந்தநிலையில் வியக்கத்தக்க வகையில் 84வது இடத்துக்கு உயர்ந்துள்ளது. 149 நாடுகளில் இந்தியா 139-வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு இந்தியா 140 வது இடத்தில் இருந்தது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 105வது இடத்திலும், வங்கதேசம் 101வது இடத்திலும், இலங்கை 129வது இடத்திலும் சீனா 84-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளன.

banner

Related Stories

Related Stories