இந்தியா

“இரவு நேரத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை தாக்குதல்” : மோடி அரசு அராஜகம்!

ஜெய்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்திலும், விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறிச் செல்லாமல் இருக்க மீண்டும் கண்ணீர் குண்டுகள் வீசப்பட்டது.

“இரவு நேரத்தில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி  காவல்துறை தாக்குதல்” : மோடி அரசு அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மத்திய பா.ஜ.க அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 40 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காததால், 6ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததுள்ளது. இந்நிலையில் இன்று 7ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

சட்டங்களை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதியாக வலியுறுத்தியுள்ளனர். அதற்கு குறைந்த எந்த சமரசத்தையும் ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளனர். மேலும், இன்று பேச்சுவார்த்தையில், முடிவு எட்டப்படவில்லை என்றால் 6ம் தேதி முதல் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

ஆளுநர் மாளிகை முற்றுகை, குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதனிடையே சுமார் 500க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் ஜெய்பூர் டெல்லி தேசிய நெடுஞ்சாலை வழியாக டெல்லி நோக்கி இன்று விவசாயிகள் சென்றனர்.

அப்போது ஹரியானா மாநிலம் ரெவாரி அருகே அவர்களை போலிஸார் தடுத்து நிறுத்தினர். தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் இருந்து போலிஸார் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மேற்கொண்டு செல்லாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. அப்போது கண்ணீர் புகை குண்டு விழுந்ததில் ஒரு டிராக்டர் தீப்பிடித்து எரிந்தது. அதில் அந்த டிராக்டர் பலத்த சேதம் அடைந்தது.

இதனிடையே போராட்ட களத்தில் குளிர் மற்றும் மழை காரணமாக இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 7 பேர் உயிரிழந்திருப்பதாக விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories