நாட்டின் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் தீங்கு விளைவிப்பதாக உள்ள 43 செல்ஃபோன் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு.
பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இந்த செயலிகள் செயல்பட்டதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லடாக் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுறுவலை அடுத்து இந்தியாவில் பிரபலமாக இயக்கப்பட்டு வந்த டிக்டாக், பப்ஜி, லூடோ போன்ற 118 மற்றும் 59 என சீன செயலிகளுக்கு மத்திய மோடி அரசு தடை விதித்திருந்தது.
அந்த வகையில் தற்போது அலிபாபா, அலி சப்ளையர்ஸ், அலி பே, ஸ்னாக் வீடியோ, கேம்கார்டு மற்று டேட்டிங் செயலிகள் என 43 செயலிகளை இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 69ஏ பிரிவின் கீழ் இந்திய பயனர்கள் பயன்படுத்தாத வகையில் தடை செய்யப்பட்டுள்ளது.