இந்தியா

“பட்டாசு வெடிக்கும் போது கிருமிநாசினியை தவிருங்கள்” : மருத்துவர்கள் எச்சரிக்கை !

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு கொளுத்தும்போது நாம் சானிடைசரை தவிருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவித்தியுள்ளனர்.

“பட்டாசு வெடிக்கும் போது கிருமிநாசினியை தவிருங்கள்” : மருத்துவர்கள் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தீபாவளி கொண்டாட்டத்தில் பட்டாசு முக்கிய இடம் பிடிக்கிறது. பட்டாசு கொளுத்தும்போது நாம் சானிடைசரை தவிருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவித்தியுள்ளனர்.

கடந்த பத்து மாதங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைவரின் வீட்டிலும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் புழக்கத்தில் இருக்கிறது. ஆல்கஹால் எளிதில் தீப்பற்றக்கூடிய திரவம்.

கைகளில் சானிடைசர்களை உபயோகித்து விட்டு மத்தாப்புகள், வெடிகள் போன்றவற்றைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மீறித்தொட்டால் கைகளில் தீக்காயம் உண்டாகும் நிலை வரும். பெரிய தீ விபத்துகள் நேரும் அபாயமும் இருக்கிறது. மேலும், வீட்டிலும் சானிடைசரையும் வெடி மத்தாப்புகளையும் ஒன்றாக வைக்கக்கூடாது.

“பட்டாசு வெடிக்கும் போது கிருமிநாசினியை தவிருங்கள்” : மருத்துவர்கள் எச்சரிக்கை !

அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருக்கும் ஆல்கஹால் கலந்த சானிடைசர் திரவங்களை குழந்தைகள், பிள்ளைகள் கைக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். கை கழுவ சோப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெடிகள், மத்தாப்புகளை உபயோகித்து முடிந்த சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சானிடைசர்களுக்கு திரும்பலாம் அல்லது வெடிகள் வெடிக்கும் முன்பு கைகளை நன்றாக தண்ணீரில் கழுவி விட்டால் சருமத்தின் மேற்புறத்தில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத ஆல்கஹால் படிமம் நீக்கப்பட்டு விடும்.

banner

Related Stories

Related Stories