பீகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்குப்பதிவு ஏற்கனவே 2 கட்டமாக நடைபெற்ற நிலையில், கடைசி கட்டமாக 78 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில், 15 மாவட்டங்களில் 1,204 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடியும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நடைபெறும் வாக்கு மையங்களில் கொரோனா நடப்பு நடவடிக்கை மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற ஏற்படுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், 3 கட்டங்களிலும் பதிவான வாக்குகள், வரும் 10ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அன்றயை தினம், பீகார் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது தெரியவரும்.