வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, கடந்த 1999ம் ஆண்டு முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சராக இருந்தவர் திலீப் ராய். மேலும். 2009ம் ஆண்டு பா.ஜ.கவில் இணைந்த திலிப் ராய் , 2018-ம் ஆண்டு பா.ஜ.க-விலிருந்து விலகினார்.
முன்னதாகம் திலீப் ராய் பதவி வகித்த காலத்தின் போது, ஜார்கண்ட் மாநிலத்தில் சி.டி.எல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரின் பேரில், திலீப் ராய் நிலக்கரி ஊழல் தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கு டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்தது. இந்த நிலையில், வாதங்கள் அனைத்தும் முடிந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கில் டெல்லி ரோஸ் அவனீவ் மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாரத் பராசர் கடந்த வாரம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில், “கடந்த 1999ம் ஆண்டு நடைபெற்ற நிலக்கரி ஊழலில் முன்னாள் அமைச்சர் திலீப் ராய் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபணம் ஆகியுள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தண்டனை விவரங்கள் வரும் பின்னர் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தர்.
இந்நிலையில், நிலக்கரி ஊழல் வழக்கில் திலிப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்ட 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இன்று தீர்ப்பளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள தீர்ப்பில், “நிலக்கரி ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் திலிப் ராய், நிலக்கரித்துறை அமைச்சக அதிகாரிகள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்யானந்த் கவுதம், கேஸ்ட்ரான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குநர் மகேந்திர குமார் அக்ராவாலா ஆகியோருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும், இவர்கள் தலா ரூ.10 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்.