இந்தியா

துப்பாக்கி வன்முறையைத் தடுக்க தோட்டாக்களில் QR குறியீடு - மத்திய பிரதேச காவல்துறை புதிய திட்டம்!

நாட்டிலேயே முதன்முறையாக துப்பாக்கி குற்றங்களை கட்டுப்படுத்த ‘QR’ தோட்டாக்கள் அறிமுகம்.

துப்பாக்கி வன்முறையைத் தடுக்க தோட்டாக்களில் QR குறியீடு - மத்திய பிரதேச காவல்துறை புதிய திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

இந்தியாவில் முதன்முறையாகத் துப்பாக்கிச்சூடு குற்றங்களைக் கட்டுப்படுத்த ‘QR’ code தோட்டாக்கள் வழங்க மத்திய பிரதேச மாநில காவல்துறை புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவைப் பொருத்தவரை உரிமம் பெற்ற பிறகுதான் ஒருவர் துப்பாக்கி வைத்துக்கொள்ள முடியும். அதுவும் அந்த உரிமம் பாதுகாப்பு, விளையாட்டு, பயிர் பாதுகாப்பு ஆகிய மூன்று காரணங்களுக்கு மட்டும்தான் ஒருவருக்குத் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் வழங்கப்படும்.

இந்தியாவில் அனுமதியில்லாமல் துப்பாக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். துப்பாக்கி உரிமம் இல்லாமல் கள்ளத் துப்பாக்கியைப் பயன்படுத்தினால் அவர் குற்றவாளியாகக் கருதப்படுவார். வடமாநிலங்களில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களே பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவர்.

துப்பாக்கி வன்முறையைத் தடுக்க தோட்டாக்களில் QR குறியீடு - மத்திய பிரதேச காவல்துறை புதிய திட்டம்!

இந்நிலையில், மத்திய பிரதேச மாநில போலிஸாரிடம் சாம்பல் மலைப்பகுதி மக்கள் துப்பாக்கி உரிமம் கேட்டு அதிகமாக விண்ணப்பிக்கின்றனர். குறிப்பாக பின்த் என்ற மாவட்டத்தில் மட்டும் 22,400 உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன.

இந்த துப்பாக்கி வைத்திருக்கும் பலர் நிறையக் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால், காவல்துறை துப்பாக்கி உரிமம் விஷயத்தில் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

துப்பாக்கி வன்முறையைத் தடுக்க தோட்டாக்களில் QR குறியீடு - மத்திய பிரதேச காவல்துறை புதிய திட்டம்!

இதுகுறித்து பிந்த் மாவட்ட எஸ்.பி மனோஜ் குமார் சிங் கூறியதாவது :

மத்திய பிரதேசத்தில் ‘QR CODE’ பதிவுசெய்யப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள் விரைவில் துப்பாக்கி உரிமம் பெற்றவர்களுக்கு வழங்கப்போவதாகவும் இந்தியாவில் முதல்முறையாக மத்தியப் பிரதேசத்தில்தான் இத்திட்டம் தொடங்கப்படுகிறது என்றும் அனைத்து துப்பாக்கி உரிமதாரர்களுக்கும் ‘QR’ கோடுகள் உள்ள தோட்டாக்கள் வழங்கப்படும்.

‘QR CODE ‘ ஸ்கேன் செய்யதவுடன் துப்பாக்கி உரிமம் வைத்திருக்கும் நபர் குறித்த தகவல்கள் அனைத்தும் வந்துவிடும். இந்த புதிய திட்டத்தின் மூலம் துப்பாக்கிகள் தொடர்பான குற்றங்களைப் பெருமளவில் தடுக்கமுடியும். மேலும், இதன் மூலமே தோட்டா விற்பனையாளர் மற்றும் வாங்குபவரின் தகவல்கள் கிடைக்க வசதியாகவும் இருக்கிறது.

இதனால் ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தும் உரிமையாளர் சுடுவதற்கு முன் எளிதில் மாட்டிக்கொள்வோம் என்று பலமுறை யோசிப்பார். பிந்த் மாவட்டத்தில் 22,407 பேர் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் மற்றும் 10 லட்சம் தோட்டாக்கள் உள்ளதாகக் கூறினார். இத்திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தினால், துப்பாக்கி குற்றங்கள் பெருமளவில் தடுக்க உதவியாக இருக்கும்.

தொடர்ந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 150 கொலைகள் நிகழ்ந்தன. பெரும்பாலானவை சட்டவிரோதத் துப்பாக்கியைப் பயன்படுத்தியவர்கள். ஹார்ட்கோர் குற்றவாளிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து நாட்டுத் துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வாங்குகிறார்கள், மேலும் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வாங்கி தொழிற்சாலை தயாரித்த தோட்டாக்களைப் பயன்படுத்துகிறார்கள். துப்பாக்கி வன்முறையை 10% குறைத்தாலும் இது எங்களது முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories