இந்தியா

உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral

”எங்கள் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானம் இல்லை” என அழுத முதிய தம்பதிகளின் வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அந்த கடையில் சாப்பிட நூற்றுக்கணக்கானவர்கள் கூடினர்.

உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

டெல்லியின் மால்வியா நகரில் ”பாபா கா தாபா” என்று ஒரு சிறிய உணவுக்கடையை தனது மனைவி பதாமி தேவியுடன் (78) இணைந்து நடத்தி கந்தா பிரசாத் (80 வயது) என்பவர் கடந்த 30 ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கின்போது வருமானமின்றி போராடி வந்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களைப் பற்றிய வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral
உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral

”எங்கள் சிறிய உணவகத்தில் யாரும் சாப்பிட வராததால் வருமானம் இல்லை” அழுத முதிய தம்பதிகளின் வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவை பார்த்துவிட்டு கிரிக்கெட் வீரர் அஷ்வின், பாலிவுட் நடிகை சோனம் கபூர், காங்கிரஸ் தலைவர் மோகன் குமாரமங்கலம் உள்ளிட்ட பலர் அந்த முதிய தம்பதிக்கு உதவ முன்வந்தனர்.

உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral
உணவுக்கடை நடத்தும் முதிய தம்பதிக்கு குவிந்த உதவி : இந்திய அளவில் பேசப்படும் ’பாபா கா தாபா’ #Viral

இந்நிலையில், அந்த சிற்றுண்டி கடைக்கு ஆதரவு அளிக்கக் கோரி இணையத்தில் #Babakadhaba என்ற ஹேஷ்டேக் வைரலானது.

தற்போது டெல்லிவாசிகள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் முதிய தம்பதியின் கடையில் உணவருந்த குவிந்தனர். மேலும் அந்தக் கடையில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி உணவருந்தினர். அவர்கள் வந்து சாப்பிடுவதுடன் அதை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

இந்த செய்தியை பகிர்ந்துகொண்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘இதுதான் டெல்லி மக்களின் இதயம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இந்த #BabakaDhaba உணவகம் உணவு டெலிவரி நிறுவனமான zomatoவுடன் இணைந்துள்ளது. இந்த தகவலை அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories