இந்தியா

புதுவையில் சட்ட விரோதமாக மாணவர்களை சேர்த்த 6 மருத்துவக் கல்லூரிகள் - ரூ.30 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்

கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்களை சட்டவிரோதமாக சேர்த்த புதுச்சேரியைச் சேர்ந்த ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுவையில் சட்ட விரோதமாக மாணவர்களை சேர்த்த 6 மருத்துவக் கல்லூரிகள் - ரூ.30 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், 2017-18ம் கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்புகளுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளாத மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் சட்டவிரோதமாக சேர்க்கப்பட்ட மாணவர்களை நீக்கம் செய்து, இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ கவுன்சில் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், தேர்வு எழுத மாணவர்களுக்கு அனுமதியளித்தது. அதன்படி தற்போது அந்த மாணவர்கள் படிப்பை முடித்து விட்டனர்.

இதற்கிடையில், புதுச்சேரியில் உள்ள ஏழு மருத்துவ கல்லூரிகளும், கலந்தாய்வில் கலந்து கொண்ட மாணவர்கள், தங்களுக்கு சேர்க்கை வழங்கக் கோரியும் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மாணவர்களை நீக்கம் செய்து மருத்துவ கவுன்சில் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

புதுவையில் சட்ட விரோதமாக மாணவர்களை சேர்த்த 6 மருத்துவக் கல்லூரிகள் - ரூ.30 லட்சம் அபராதம் விதித்த ஐகோர்ட்

மேலும், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி, மாணவர்களை சேர்த்த அறுபடை வீடு மருத்துவ கல்லூரி, வினாயகா மிஷன் மருத்துவ கல்லூரி, ஸ்ரீமகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி, மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் ஆகிய ஆறு மருத்துவ கல்லூரிகளுக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், புதுச்சேரி அரசின் கொரோனா நிவாராண நிதிக்கும், சென்னையில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கும் நான்கு வாரங்களில் வழங்கவும் உத்தரவிட்டு, அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் குறிப்பிட்ட கல்வியாண்டுக்குள்ளேயே தீர்வு காண வேண்டும் எனவும், குறிப்பாக மருத்துவ கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளில் நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், சட்டவிரோத மாணவர் சேர்க்கைக்கு கருணை காட்டினால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும் எனவும் நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ், தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், கலந்தாய்வில் கலந்து கொள்ளாத 65 மாணவரின் மருத்துவ முதுநிலை படிப்பு செல்லாது எனவும் தீர்ப்பளித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories