இந்தியா

செயல்படாத வென்ட்டிலேட்டர்களை குஜராத்துக்கு வழங்கியது தவிர வேறு எதற்காக PM Cares நிதி பயன்படுத்தப்பட்டது?

பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு நிதி நிதிவழங்கப்படுமா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

செயல்படாத வென்ட்டிலேட்டர்களை குஜராத்துக்கு வழங்கியது தவிர வேறு எதற்காக PM Cares நிதி பயன்படுத்தப்பட்டது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பி.எம்.கேர்ஸ் நிதி வெளிப்படைத் தன்மை கொண்டது என்றால் அதற்கு எவ்வளவு நிதி வந்துள்ளது, எதற்கு செலவிடப்பட்டுள்ளது என்கிற கேள்விகளுக்கு ஏன் பதிலளிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.

பி.எம்.கேர்ஸ் நிதி குறித்துப் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பி.எம்.கேர்ஸ் நிதி பொதுநிறுவனம் இல்லை என்பதால் அதன் விபரங்களை வெளியிடத் தேவை இல்லை என்றும் அதன் வெளிப்படைத் தன்மை குறித்து கேள்வி எழுப்ப காங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை என்றும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர்கள் பி.எம்.கேர்ஸ் நிதி மூலம் செயல்படாத வென்ட்டிலேட்டர்களை குஜராத் மாநிலத்துக்கு வழங்கியதைத் தவிர வேறு எதற்காக அந்த பணம் செல்விடப்பட்டது என்று கூறமுடியுமா என்று கேள்வி எழுப்பினர்.

செயல்படாத வென்ட்டிலேட்டர்களை குஜராத்துக்கு வழங்கியது தவிர வேறு எதற்காக PM Cares நிதி பயன்படுத்தப்பட்டது?

மேலும், வெளிநாட்டு நிதி அதற்கு எவ்வளவு வந்தது என்பதைக் கூறமுடியுமா என்றும் கேள்வி எழுப்பினர். தேசிய பேரிடர் நிவாரண நிதி போன்றதுதான் பி.எம்.கேர்ஸ் நிதி என்றால் எதற்கு இரண்டு நிதிகள்? பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து மாநிலங்களுக்கு நிதி நிதிவழங்கப்படுமா என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories