இந்தியா

கொரோனாவில் இருந்து முதியோர்களை காக்க மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி!

தனிமையில் வசிக்கும் முதியோரை கொரோனாவிலொருந்து பாதுகாக்க மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு.

 கொரோனாவில் இருந்து முதியோர்களை காக்க மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பல மாநிலங்களில் கொரொனா காலத்திலும் கூட சரியாக முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதியோருக்கான ஓய்வூதியத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கடந்த மாதம் உத்தரவிட்டனர்.

மேலும், முதியோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், முகக்கவசம், சானிடைசர் போன்றவற்றை வழங்க வேண்டும். முதியோர் இல்லங்களில் பாதுகாப்பு கவசங்கள் வழங்கவும், தினமும் கிருமினாசினி தெளித்து சுத்தமாக வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.

இதனிடையே இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories