இந்தியா

இந்தி திணிப்பு : பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட #ஹிந்தி_தெரியாது_போடா ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்த தமிழர்கள்!

பாஜ.கவின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தி திணிப்பு : பா.ஜ.கவுக்கு பாடம் புகட்ட #ஹிந்தி_தெரியாது_போடா ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்த தமிழர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க அரசு நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கை உள்பட அரசின் அறிவிப்புகள் ஒவ்வொன்றிலும் இந்தி - சமஸ்கிருத மொழித் திணிப்பை கையாண்டு வருகிறது.

அதுமட்டுமல்லாது, இந்தியாவில் இந்தி பேசும் வட மாநிலத்தவர்கள் மத்தியில் இந்தி பேசுபவர்களே இந்தியர்கள் என்கிற ரீதியில் தவறான கருத்தையும் பா.ஜ.க ஆதரவாளர்கள் விதைத்து வருகின்றனர். இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அவ்வப்போது தகுந்த பதிலடிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமீபத்தில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்ற தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது எனக் கூறியதற்காக “நீங்கள் இந்தியரா?” என அங்கு பணியிலிருந்த சி.ஐ.எஸ்.எஃப் பெண் அதிகாரி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினரிடம் இந்தி ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்திய அதிகாரிக்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்தனர். பலரும் தாங்களும் இதுபோல அவதிக்கப்பட்டதாக தங்கள் அனுபவங்களை கூறி வந்தனர்.

அந்த வகையில் இயக்குனர் வெற்றிமாறன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவங்களுக்கு விமானநிலையத்தில் நடந்ததைப் போன்ற அவமதிப்பு தனக்கும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ‘மெட்ரோ’ திரைபட கதாநாயகன் ஷிரிஷ் ஆகியோரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்றை யுவன் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில், யுவன் அனிந்திருந்த டி-சர்ட்டில், I am a தமிழ் பேசும் indian என்றும் ஷிரிஷ் அனிந்திருந்த டிசர்ட்டில், ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமும் அமைந்திருந்தது.

அவர்களைத் தொடர்ந்து சினிமா பிரபலங்கள் பலரும் I am a தமிழ் பேசும் indian, இந்தி தெரியாது poda என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிந்தபடி புகைப்படத்தை பகிரத்துவங்கினர். இதனைப் பொறுத்துக்கொள்ளமுடியாத பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மற்றும் இந்துத்வா கும்பல் இந்த கருத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யத் துவங்கினர்.

இதனால், ஆத்திரமடைந்த ட்விட்டர்வாசிகள் பாஜ.கவின் இந்தி திணிப்புக்கு பாடம் புகட்டும் வகையில், #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனால் இந்திய அளவில் #ஹிந்தி_தெரியாது_போடா என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. அதேபோல், #TamilSpeakingIndian #HindiTheriyathuPoda #StopHindiImposition #Imaதமிழ்SpeakingIndian என்ற ஹேஷ்டேக்களும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

banner

Related Stories

Related Stories