இந்தியா

6 நாட்களாக தொடர்ந்து ஏறும் பெட்ரோல் - டீசல் விலை : கண்டுகொள்ளாமல் மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகள்!

கடந்த ஆறு நாட்களாக தொடர்ந்து பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே போகின்றது.

6 நாட்களாக தொடர்ந்து ஏறும் பெட்ரோல் - டீசல் விலை : கண்டுகொள்ளாமல் மக்களை வதைக்கும் மத்திய மாநில அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பெட்ரோல் விலை யாரும் கவனிக்கப்படாமலேயே பெருநகரங்களில் ஏறிக்கொண்டே செல்கின்றன. ஆகஸ்ட் 25-ம் தேதி வரை மட்டும் தொடர்ந்து ஆறு நாட்கள் பெட்ரோல் விலை ஏறியுள்ளது.

அரசு நடத்தும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் அறிக்கையின் படி ஆகஸ்ட் 25-ம் தேதி காலை 6 மணிக்கான நிலவரத்தின்படி, டெல்லி, சென்னை, மும்பை , கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய பெருநகரங்களில் பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு 9 முதல் 11 பைசாக்கள் வரை ஏறியுள்ளது. ஆனால் டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 84.73 ரூபாயில் உள்ளது. டீசல் விலை ஒரு லிட்டர் 78.86 பைசாவில் உள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 81.73 பைசாவும், டீசல் விலை ரூபாய் 73.56 பைசாவுமாக உள்ளது.

மும்பை நகரைப் பொறுத்தவரை ஒரு லிட்டர் பெட்ரோல் ரூபாய் 88.39 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 80.11 பைசாகவும் உள்ளது.

இந்தியாவில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களே அதிக அளவிலான பெட்ரோல் பங்குகளை வைத்துள்ளன. அவையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

banner

Related Stories

Related Stories