கொரோனா பரவல் காரணமாக விடுக்கப்பட்ட ஊரடங்கினால் வியாபாரத்தில் ஈடுபட முடியாமல் தொழிலாளர்கள் பலர் கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்.
இருப்பினும் அரசுகள் அளித்துள்ள நேரக் கட்டுப்பாட்டுக்குள் முடிந்தவரையில் தொழில் ஈட்டி வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ள வியாபாரிகள் பாடுபட்டு வருகிறார்கள். அந்த சமயத்தில் பல்வேறு அதிகார அத்துமீறல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அவ்வகையில் உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் சாலையோரம் தள்ளுவண்டியில் வைத்து விற்கப்பட்டு வந்த சோளத்தை உதவி காவல் ஆய்வாளர் வருண் குமார் சாலையில் வீசி வண்டியை குப்புற கவிழ்த்த அராஜகம் நிகழ்ந்துள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, போலிஸார் நடந்துகொண்ட விதம் குறித்தும் கண்டனங்கள் எழுந்துள்ளது.
இதனையடுத்து வீடியோ வைரலானதும், உதவி காவல் ஆய்வாளர் வருண் குமாரின் செயலுக்கு வாரணாசி காவல்துறை மன்னிப்பு கோரியதுடன் வருண் குமாரை பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.