சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கக் கோரி தேசிய நெடுஞ்சாலைத் துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வில் நேற்று விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை பத்து முறை வழக்கு விசாரணை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் திட்டத்துக்கான தடையை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இதனிடையே வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதே நேரத்தில் இந்த வழக்கில் 80 மேற்பட்ட மனுதாரர்கள் இருப்பதால் அனைவரும் காணொலிக்காட்சி மூலம் விசாரணையில் பங்கேற்க இயலாது என்பதால் நீதிமன்றத்தில் பணிகள் இயல்பு நிலை திரும்பிய பின்னர் வழக்கின் விசாரணையை நடத்த வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் ஒரு பதில்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் வழக்கை ஒருவாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர். அதன் பின்னர் மீண்டும் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையின் போது மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தரப்பில் பதில் தாக்கல் செய்வதற்காக அவகாசம் கோரப்பட்டது. வைத்தது. அதற்கு நிதிபதிகள் அனுமதி வழங்கினர்.
பின்னர் நாளை மறுநாள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் வழக்கை ஆகஸ்ட் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே, 10 ஆயிரம் கோடி செலவிலான இந்த எட்டு வழிச்சாலை திட்டம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஆகவே நிலங்களை கையகப்படுத்தவும், திட்டத்தை செயல்படுத்தவும் சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு அறிக்கை மீதான எதிர்ப்புக் குரல்கள் வலுத்து வரும் வேளையில், அந்த வரைவு அறிக்கை சட்டமாக இயற்றப்படாததற்கு முன்பே எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என மத்திய அரசு கூறியிருக்கிறது. இது அப்பட்டமான எதேச்சதிகாரத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
மேலும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020 ஆல் என்னவெல்லாம் ஆபத்து நேரும் என சமூக ஆர்வலர்களும், இயற்கை ஆர்வலர்களும் தொடர்ந்து எடுத்துரைத்து வரும் போது பாஜகவினரோ, அவ்வாறெல்லாம் எப்படி நடந்துவிடும் என கூக்குரலிட்டு வருகின்றனர். அந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் பாஜக, இந்து முன்னணி போன்ற வலதுசாரி அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதைக் கூட அறிந்திராத சங்கிகளாகவே இருக்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே EIA 2020க்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் இந்த வரைவு அறிக்கைக்கு மேலும் எதிர்ப்பை வலு சேர்த்துள்ளது மத்திய அரசு. ஆகவே இன்னும் #ScarpEIA2020 #WithdrawEIA2020Draft போன்றவை உரக்கச் சொல்லப்பட்டு வருகிறது.