கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மாணவர்களுக்கு 30 சதவீத பாடத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தியில் திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள் போன்ற பாடங்களை மோடி அரசு நீக்கியுள்ளதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று (15-07-2020) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தி விவரம் பின்வருமாறு :
"இராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் ‘இராணுவத்தில் தமிழர்கள் பங்கு’ என்ற பாடத்தை நீக்குகிறார்.
வெறும் பேச்சு மட்டும்தானா?
தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழ் மண்ணில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்!"
இவ்வாறு தெரிவித்துள்ளார்.