இந்தியா

"ஆக்கிரமித்தது சீன துருப்புகளா? சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?" - மோடியை விளாசும் ப.சிதம்பரம்!

எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஆக்கிரமித்தது சீன துருப்புகளா? சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?" - மோடியை விளாசும் ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற சண்டையில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த எல்லை மோதல் பூதாகரமாகியுள்ளது. சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய பா.ஜ.க அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றன.

இராணுவ வீரர்கள் பற்றியும், எல்லை விவகாரம் பற்றியும் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் பெயரை எங்குமே குறிப்பிடுவதில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே பகுதியில் அமைந்துள்ள முகாமில் இராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போதும் சீனா எனக் குறிப்பிடவில்லை.

"ஆக்கிரமித்தது சீன துருப்புகளா? சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா?" - மோடியை விளாசும் ப.சிதம்பரம்!

இந்த நிலையில், முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் ‘சீனா’ என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா?

இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

banner

Related Stories

Related Stories