இந்தியா

திரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்!

அகர்தலாவில் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பினரால் அமைக்கப்பட்டிருந்த ரத்த தான முகாமை பா.ஜ.க-வினர் சிதைத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் முதல் தேசிய ஊரடங்கு அறிவிக்கும் போது சுமார் 600 கொரோனா பாதிப்புகளை கொண்டிருந்தது. ஆனால், நான்காம் கட்ட ஊரடங்கை கடந்து ஐந்தாம் கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 83 ஆயிரத்தை கடந்துள்ளது.

இப்படியான இக்கட்டான சூழலிலும் இந்துத்வா கும்பலின் தாக்குதல்களை திறைமறைவாக நிகழ்ந்துக் கொண்டே வருகின்றன.

இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தில் இதுவரை 282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நோயாளிகளின் தேவைகளுக்காக இந்திய மாணவர் சங்கம் (SFI) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் கிழக்கு அகர்தலாவில் உள்ள ராம் நகரில் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது.

திரிபுராவில் ரத்த தான முகாமை சிதைத்த பா.ஜ.க-வினர்.. SFI, DYFI அமைப்பினர் 7 பேர் படுகாயம்!

இதனை திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்கார் தொடங்கி வைத்தார். கோவிட் 19 தாக்குதல் காரணமாக ரத்த வங்கிகளில் ரத்த பற்றாக்குறை ஏற்பட்டதால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைப்பினர் கூட்டாக இந்த ரத்த தான முகாமை நடத்தினர்.

சுமார் 38 பேர் ரத்த தானம் செய்து வந்த நிலையில், திடீரென பா.ஜ.க-வினர் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர் என இளைஞர் அமைப்பின் முன்னாள் தலைவர் அமல் சக்கரவர்த்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பா.ஜ.கவினர் தாக்குதலில் ஈடுபட்டதில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக DYFI செயலாளர் நபரூன் டெப் கூறியுள்ளார். படுகாயமடைந்த அனைவரும் ஐ.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரத்த தான முகாமில் வேண்டுமென்றே தாக்குதலில் ஈடுபட்ட பா.ஜ.கவைச் சேர்ந்த 25 பேர் மீதும் மேற்கு அகர்தலா காவல்நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் நபரூன் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories