மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் அக்சய் கொத்வாலே. 30 வயதாகும் அக்சய்க்கு வரும் 25ம் தேதி திருமணம் நிச்சயக்கப்பட்டு பின்னர் கொரோனா ஊரடங்கு காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில், புனேயில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் ஊரடங்கால் வேலையின்றி தவிப்பதுடன், தெருவோர ஏழைகளும் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதை கண்டு மனம் வெதும்பினார். இதனால் தனது திருமணத்திற்காக தினம்தோறும் ஆட்டோ ஓட்டி சேர்த்து வைத்திருந்த பணம் ரூபாய் 2 லட்சத்தை புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்க செலவு செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்கான தனது வருங்கால மனைவியிடம் சென்று ஒப்புதல் கேட்டுள்ளார். சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த ரூ.2 லட்சத்தை தனது வருங்கால மனைவி ஒப்புதலுடன் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி வருகிறார் அக்ஷய்.
அதன்படி தனது நண்பர்களின் உதவியுடன் தினமும் 400 பேருக்கு உணவு அளித்து வருகிறார். இதற்காக சமையலறை ஒன்றை ஏற்படுத்தி நண்பர்களிடன் சேர்ந்து உணவு அளித்து வருகிறார்.
மேலும் தனது ஆட்டோவிலேயே உணவுகளை ஏற்றிச் செல்லும் அக்ஷய், ஒலி பெருக்கி அமைத்து கொரோனா குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார். அக்சய் கொத்வாலேவின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்தக்களையும், பாராட்டுக்களை தெரிவித்துவருகின்றனர்.