இந்தியா

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?

20 லட்சம் கோடியை பொறுத்தவரையில் பெரு முதலாளிகளுக்கு கொடுப்பார்களே, தவிர சிறு குறு நிறுவனங்களுக்கு கொடுக்கமாட்டார்கள்.

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறும்; அதனை யாரும் தடுத்துவிட முடியாது. இந்தப் பேரிடர் முடிந்தபிறகு உலகையே இந்தியாதான் வழி நடத்தப்போகிறது” என தனது திருவாய் மலர நம்பிக்கை வார்த்தைகளாக 30 நிமிடம் உரையாற்றியிருக்கிறார் பிரதமர் மோடி.

உலகை அச்சுறுத்திய கொரோனா பாதிப்பு இந்தியாவில் தனது தீவிரத் தன்மையைக் குறைத்துக்கொள்ளவில்லை. கொரோன தடுப்பு நடவடிக்கையாக மார்ச் இறுதியில் தொடங்கிய ஊரடங்கை 3 வது கட்டமாக நீடித்துள்ளது மத்திய அரசு. தற்போது அந்த மூன்றாம் கட்ட ஊரடங்கு வரும் மே 17-ம் வரை நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கு காலத்தில் 3 முறை மாநில முதல்வர்களைச் சந்தித்து அலோசனைக் கேட்டறிந்துள்ளார். இதுவரை இந்த ஊரடங்கை சமாளிக்க 1,70,000 கோடி ரூபாய்க்கு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டன. அதன் மூலம் 80 கோடி மக்களுக்கு உணவுப்பொருள்கள் வழங்கப்படும், 8.69 கோடி விவசாயிகளுக்கு 2,000 ரூபாய் நேரடியாக அவர்கள் வங்கிக் கணக்கில் வழங்கப்படும், ஜன்தன் கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 500 - அடுத்த மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும் மற்றும் மூன்று மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்தார்.

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?

இப்படி 1,70,000 கோடி ரூபாய் திட்டத்தின் படி இன்னும் பலர் பயனடையவில்லை. அதுமட்டுமின்றி அரசின் எந்த ஒரு திட்டமும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்கவில்லை. குறிப்பாக திட்டம் அனைத்தும் வாய்ஜாலமாகவே இருக்குறது என எதிர்கட்ச்சிகள் குற்றம் சாட்டினார். ஏன் நேற்று முன் தினம் பிரதமரின் ஆலோனைக் கூட்டத்தில் எடப்பாடியார் தவிர மற்ற மாநில முதல்வர்கள் கடும் முனங்களுடன், காட்டமாகவும் பேசியதாக செய்தி வந்தது.

இந்நிலையில்தான் பிரதமர் மோடி, நேற்ற நான்காவது முறையாக நாட்டு மக்களிடையே நேற்றைய தினம் உரையாடினார். கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள பொன்னான நம்பிக்கை உரிய வார்த்தைகளை கூறி பேசத் துவங்கினர். வார்த்தைகளில் விளையாட்டுக் காட்டும் வல்லமை நிறைந்த பேச்சாற்றல் கொண்ட மோடி 30 நிமிடம் பேசினார்.

அப்போது அவர், “இந்தியாவில் கொரோனா பாதிப்பு 70 ஆயிரம் ஆனதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் தோற்றுவிடக்கூடாது. இந்தியாவில் வளம் இருக்கிறது. அறிவுபடைத்தவர்கள் இருக்கிறார்கள். புதிய விடியலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியைக் கொடுத்து வருகிறது” என்று பேசினார்.

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?

தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவின் வளர்ச்சியில் 5 முக்கிய அம்சங்கள் உள்ளது. இந்திய பொருளாதார சிக்கலை சரி செய்ய ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த திட்டங்கள் மூலம் நாட்டில் வளர்ச்சி ஊக்கம் அடையும். இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி இந்தியா உள்நாட்டு சந்தையை நோக்கி நகரவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியா சுயசார்பு பொருளாதாரத்தை கையில் எடுக்கப்போகிறது. அதனால் அனைவரும் உள்நாட்டு பொருட்களை வாங்குவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வரப்படும். என சொல்லி இருக்கிறார்.

வழக்கம் போலவே பிரதமர் மோடியின் அறிவிப்பில் மாயஜால வார்த்தைகளும், குழப்பங்கள் நிறைந்த சில விவரங்களும் உள்ளது. உதாரணத்திற்கு, இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் தொகை 22.46 லட்சம் கோடி, இந்த நிலையில் கொரோனா பேரிடர் நிவாரணமாக அரசு முன்பு அறிவித்த 1,70,000 மற்றும் இப்போது அறிவித்து 20 லட்சம் கோடி என்பது பட்ஜெட் தொகைக்கு இணையாக உள்ளது. அப்படியென்றால் நிவாரண நிதி பட்ஜெட்டில் கை வைக்கப்படுமா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?

சரி முதலில் பிரதமர் மோடி சொன்ன சுயசார்பு திட்டம் என்றால் என்ன என்று பார்ப்போம். சுயசார்பு திட்டம் சுதேசி என்றும் வார்த்தையை பயன்படுத்துவதற்கு பதிலாக சுயசார்பு என பயன்படுத்திவிட்டார். தேசியவாதிகளால் பொருளாதார தீர்வாக பார்க்கபட்ட சுதேசி திட்டம், முன்பே புதைந்து போன ஒன்று. இதனிடையே பிரதமர் மோடி முன்வைத்துள்ள சுயசார்பு திட்டம் திட்டத்தின் இன்னொரு டெம்ப்ளேட்தான். உலக வர்த்தக் அமைப்பில் கையெழுத்திவிட்டு தன் போக்கில் உற்பத்தி என்பது வெறும் பம்மாத்து என்பது நாடறிந்தே!

இது இப்படி இருக்கும்போது மோடி அரசின் இந்த நிவாரணம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் தொடர்புக் கொண்டு பேசினோம்.

அப்போது பேசிய கனகராஜ், “இந்தியாவில் சுயசார்பு பொருளாதாரம் என சொல்கிறார். அதேசமயத்தில் இந்தியாவில் ஜப்பான் போன்ற வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் வருகிறது. அதனைக் கவருவதற்காகவே இந்தியா தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டு வருவதாக சொல்கிறார்கள்.

இப்போது சுயசார்பு என சொல்வது எந்த விதத்தில் சரியாகும். இவ்வளவு காலம் வெளிநாட்டை எல்லாம் சுற்றி வந்தது அங்குள்ள மூலதனத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு தான் என்றார் பிரதமர் மோடி. ஆனால் இப்போது அப்படியே யூடர்ன் அடிக்கிறார்.

File image
File image

இதில் பிரச்சனை என்னவென்றால், மோடி அறிவித்த 20 லட்சம் கோடி இந்தியாவில் உள்ள பெரு முதலாளிகளுக்கு கொடுப்பதற்கான ஏற்பாடுகளே. இதுதான் அவர்கள் நோக்கம். குறிப்பாக கொரோனா காலத்தில் ஏற்கெனவே முதலாளிக்கு வழங்க இருந்துவரும் சிக்கலை கைவிட்டுவிட்டு பெரும் முதலாளிக்கு சலுகை அளிப்பதற்காவே இப்போது முயற்சிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாது மோடிக்கு உண்மையில் கரிசனம் இருந்திருந்தால் ‘ஊரடங்கால் தொழிலாளர்கள் கஷ்டபடுகிறார்களே’ என ஒரு வார்த்தையாவது சொல்லிருப்பார். ஆனால் தொழிலாளர்கள் பற்றி வாயே திறக்கவில்லை; சரி சுயசார்ப்பு என்றாலும் இங்குள்ள தொழிலாளர்கள், தொழில் பற்றிதானே பேசியிருக்கவேண்டும். அதைப் பற்றி பேசவில்லை.

குறிப்பாக இங்குள்ள சிறு-குறு தொழில் நிறுவங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசாங்கமும், பொதுத்துறை நிறுவனங்களும் தரவேண்டும் என்று நிதின் கட்கரியே சொல்யிருக்கிறார். மேலும், 4 வார ஊரடங்கால் 22 சதவீதமான தொழில்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டும். அதே 8 வாரங்கள் ஆனது என்றால், 43 சதவீதமான தொழில்கள் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டும் என சொல்லியிருக்கிறார்.

“மோடி சொன்ன சுயசார்பு பொருளாதாரம் வழக்கமான மாயஜால வார்த்தைகளே” - உண்மையில் ஒரு பயனும் இல்லையா?

சுயசார்பு திட்டம் என்றால் அதைப் பற்றி ஏன் பேசவில்லை. இதுவரை நிதின்கட்கரி சொன்னதைப் பற்றி ஏன் இன்னும் பேசவில்லை என்றால், அந்த 22 சதவீதமான தொழில்களை மூடினால் மூடட்டும் என்றுதானே நினைக்கிறார்கள். சுயசார்பு கொள்கை என பேசுவது வழக்கம் போல புதிய இந்தியா பிறக்கும் - வல்லரசு ஆகிவிடும் என பேசுவதற்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதே என் கருத்து.

அடுத்தாக இந்த 20 லட்சம் கோடியை பொருத்த வரையில் பெரு முதலாளிகளுக்கு கொடுப்பார்களே, தவிர சிறு குறு நிறுவங்களுக்கு கொடுக்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி 20 லட்ச கோடியும் முழுமையாக கொடுக்கப்படுப்படுமா என்று தெரியவில்லை. இருப்பின் அறிவிப்பு வந்தால் தான் மற்ற விவரம் தெரியும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories