இந்தியா

“ஓடும் கார் மீது சிங்கம் பட பாணியில் சாகசம்” : மத்திய பிரதேச போலிஸ் எஸ்.ஐ.,க்கு நேர்ந்த கதி! - video

சிங்கம் படத்தில் வரும் காட்சியை நிஜத்தில் செய்து சாகசத்தில் ஈடுபட்ட மத்திய பிரதேச போலிஸ் அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

“ஓடும் கார் மீது சிங்கம் பட பாணியில் சாகசம்” : மத்திய பிரதேச போலிஸ் எஸ்.ஐ.,க்கு நேர்ந்த கதி! - video
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் நாடுமுழுவதும் போலிஸார் முழுக் கண்காணிப்பில் உள்ளனர். ஊரடங்கை அமல்படுத்த ட்ரோன் மூலம் கண்காணிப்பது, வீதிகளில் அழைந்து திரிபவர்களுக்கு பல்வேறு வகையான தண்டனைக் கொடுப்பது போன்ற செயல்களில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒருவர் தன்னையும் ஒரு ஹீரோவாக நினைத்து கொண்டு, காவலர் சீருடையுடன் 2 கார்களுக்கு நடுவே நின்றபடி பயணித்து வீரசாகசம் செய்தார்.

முதலில் யாரோ ஊரடங்கு நேரத்தில் காவலர் சீருடை அணிந்து இதுபோல செய்வதாக நினைத்தனர். பின்னர் தான் தெரிந்தது சாகசம் செய்தது நிஜமான போலிஸார் என்று. மத்திய பிரதேசத்தின் தமோ நகரில் நரசிங்கார் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வருபவர் மனோஜ் யாதவ்.

இவர் இந்தியில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான சிங்கம் பட காட்சியால் ஈர்க்கப்படடு இப்படி ஒருகாரியத்தை செய்துள்ளார். இருப்பினும் இவரின் வைரல் வீடியோ மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் பார்வைக்கும் சென்றுள்ளது.

அவரின் உத்தரவின் பேரில், தமோ காவல் நிலைய உயர் போலிஸ் அதிகாரி மனோஜ் மீது தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மனோஜூக்கு போக்குவரத்து விதிமுறையை மீறியதற்காக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளனர். வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட கூடாது என்று எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories