இந்தியா

“75% ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு” : டி.சி.எஸ் நிறுவனம் அதிரடி திட்டம்!

லாக் டௌனுக்குப் பிறகு டி.சி.எஸ் நிறுவனம் கொரோனா-க்கு முன் வீட்டில் இருந்து வேலை செய்துவந்த 20 சதவீத ஊழியர்களின் அளவை 75 சதவீதமாக உயர்த்த முடிவு செய்துள்ளது.

“75% ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு” : டி.சி.எஸ் நிறுவனம் அதிரடி திட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் நீட்டிக்க தேவையான நடவடிக்கைகளை மாநில அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஊரடங்கு காரணமாக நாடுமுழுவதும் முடக்கநிலையில் உள்ளது. இதனால் நாட்டுமக்கள் பல்வேறு நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

இந்த ஊரடங்கால் பல்வேறு பிரச்சனைகளை நாடுமுழுவதும் மக்கள் சந்தித்துவந்தாலும் பல நல்ல விசயங்களையும் மக்கள் கற்றுக் கொண்டுள்ளனர். அந்தவகையில், தேவையற்ற வகையில் பணத்தை வீண்டிக்காமல் சேமிக்கும் முறையை பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் அனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்டுள்ளனர்.

“75% ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு” : டி.சி.எஸ் நிறுவனம் அதிரடி திட்டம்!

அந்தவகையில், நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களின் ஒன்றான டி.சி.எஸ் கொரோனா-க்கு முன் வீட்டில் இருந்து வேலை செய்த 20 சதவீத ஊழியர்களின் அளவை 75 சதவீதமாக உயர்த்தி நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற (work from home) முடிவு செய்துள்ளது.

இதனை அடுத்த 4 ஆண்டுகளுக்கு செய்யவிருப்பதாகவும் இதற்காக 25/25 என்கிற புதிய திட்டத்தைச் செயல்படுத்த டி.சி.எஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்மூலம் அலுவலகத்தின் தேவையற்ற வகையில் செலவிடப்படும் பணம் பெருமளவில் குறைக்கப்படும் என உறுதியாக எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக டி.சி.எஸ் நிறுவனத்தின் சார்பில் வெளியாக தகவலில், கொரோனா பாதிப்பின் காரணமாகத் தற்போது டி.சி.எஸ் நிறுவனத்தின் 3.55 லட்சம் ஊழியர்களில் சுமார் 90 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். எவ்விதமான வர்த்தகப் பாதிப்போ, வேலை பாதிப்போ இல்லாமல் பணிகள் நடந்துவருவதாக அதில் கூறிகின்றனர்.

“75% ஊழியர்கள் நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்ய ஏற்பாடு” : டி.சி.எஸ் நிறுவனம் அதிரடி திட்டம்!

மேலும் இந்த நிலையிலும் பணி சரியாக நடைபெறுவதால் கொரோனா பாதிப்புக்கு பிறகு 4.55 லட்சம் ஊழியர்களில் 75 சதவீத ஊழியர்களை நிரந்தரமாக வீட்டில் இருந்து பணியாற்ற (work from home) அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

டி.சி.எஸ் நிறுவனமே இந்த முடிவில் இறங்கியுள்ளதால் மற்ற ஐ.டி நிறுவனங்கள் இதே பாணியைக் கையில் எடுத்து தங்கள் ஊழியர்களையும் வீட்டில் இருந்தே பணியாற்ற சொல்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories