உலகம் முழுவதும் கொரோனா பெரும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. சீனாவில் பரவிய வைரஸ் இன்னும் உலகில் உள்ள 180 நாடுகளை தன்வசப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று, வல்லரசு அமெரிக்காவே வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் காவு வாங்கப்படும் மக்களை புதைக்கும் ஏற்பாட்டை செய்து வருகிறது.
இந்த சூழலில், இந்தியாவில் ஏற்கெனவே இருந்த பொருளாதார பிரச்சனைக்கு மத்தியில் கொரோனா இந்தியாவை நிலைக் குழையச் செய்துள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த பொருளாதார சீர்திருத்தத்தைவிட இந்தாண்டு மோசமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 1.9 சதவீதமாக சரியும் என இந்தியா ரேட்டிங்ஸ் கணிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் கடும் சரிவை சந்திக்கும் 1 சதவீதம் முதல் 1.9 சதவீதத்துக்குள்தான் வளர்ச்சி இருக்கும் என இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்து சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தன.
இந்நிலையில், இந்தியா ரேட்டிங்க்ஸ் என்ற பொருளாதார கண்காணிப்பு நிறுவனம் நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும். இது 29 ஆண்டுகளில் இல்லாத பின்னடைவாகும்.
ஊரடங்கு மே மாத மத்தி வரை நீட்டிக்கப்பட்டால், வளர்ச்சி 41 ஆண்டில் இல்லாத சரிவாக மைனஸ் 2.1 என எதிர்மறையாக மாறிவிடும்” எனவும் தெரிவித்துள்ளனர்.