இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 32 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், நேற்றைய தினம் வெளியான தகவலின் படி 3,500 பேருக்கு இந்த கொரோனா தொற்று தற்போது 4,288 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 292 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் எனவும், வேறு எதற்காகவும் வெளியே அநாவசியமாக சுற்றித்திரியக் கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வெளியே திரியும் மக்களை போலீஸார் வழக்குப்பதிவு செய்வதும் வாகனங்களை பறிமுதல் செய்வதும் நீடித்துவருகின்றது. பெரும்பாலான மக்கள் வீடுகளில் அமைதியாக தங்களை தனிமைப்படுத்திக்கொண்டபோதிலும் பிரதமரின் அறிவிப்பினால் தற்போது அவர்கள் வெளியேவந்துள்ளனர்.
முன்னதாக நாட்டுமக்களிடையே உரையாற்றிய மோடி கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோருக்கு கைதட்டி நன்றி செலுத்துங்கள் என அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பினால் மக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்காமல் கூட்டம் கூட்டமாக கூடிய நிகழ்வு சமூகவலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி நேற்று இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இரவு 9 மணியில் இருந்து 9 நிமிடங்களுக்கு வீடுகளில் உள்ள மின் விளக்குகளை அணைத்துவிட்டு விளக்கு ஏற்றும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் மக்களோ ஒரு படி மேலே சென்று, பட்டாசுகளை வெடிப்பதும், வீதிகளில் கூடுவதுமாக வந்து திருவிழாவை போன்று கொண்டாடியுள்ளனர். இதன் விளைவாக நாட்டில் பல பகுதிகள் தீக்கிரையாகினர்.
நேற்றைய தினம் சென்னை எர்ணாவூர் பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்புக்கு அருகில் தமிழ்நாடு கனிமவள நிறுவனத்திற்கு சொந்தமான இந்த இடத்தில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று கீழே விழுந்து தீப்பற்றியது.
இதனால் காலியாக இருந்த அந்த இடத்தில், காய்ந்து போன புற்கள், மரங்கள் உள்ளிட்டவைகள் உடனே தீப்பற்றி, மளமளவென எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் புகைமூட்டமாக காட்சியளித்தது. இதனால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
அதேப்போல், மகாராஷ்டிராவின் சோலாப்பூர் விமான நிலையத்தின் ஓடுபாதை அருகே இருந்த புல்கள் மீது மர்ம நபர்கள் தீயை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அந்த தீ அருகில் உள்ள காய்ந்த புற்களில் பரவி சுமார் 1 கி.மீட்டர் நிலத்திற்கு விமான நிலையத்தைச் சுற்றி தீ பற்றியது.
விமான நிலையத்தில் உள்ள தீயணைப்பு படைவீரர்கள் உடனே சென்று தீயை அணைத்தனர். மேலும் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் தீ அணைக்கப்பட்டது. ஒருவேளை தீ இன்னும் வேகமாக பரவினால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும் என தீயணைப்பு படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே, ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் வைசாலி நகரில் ஒரு குடிசை வீட்டில் பறக்கும் விளக்கு விழுந்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து போலீஸாரின் விசாரணையில் வைசாலி நகரில் அருகில் குடியிருக்கும் அடிக்குமாடி குடியிருப்போர் பறக்கும் விளக்குகளை வானத்தில் பறக்கவிட்டுள்ளனர். காற்றின் வேகத்தால் விளக்கு குடிசை பகுதியில் விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது வீட்டிற்குள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படவில்லை; ஆனாலும் தீயணைப்பு படையினர் வருவதற்கு வீடு முற்றிலும் தீயால் நாசமடைந்தது. அதேபோல் பலரது வாகனங்களிலும் தீ பற்றியதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மோடியின் இந்த அறிவிப்பால் பலர் சாகசம் செய்கிறோம் என்ற பெயரில் பட்டாசுகளை கைகளால் பிடித்து வெடிக்கும் போதும், வாயில் தீ பற்றவைத்து வெளியே விட முயற்சி செய்ததும் காயம் அடைந்தனர். சில இடங்களில் ஊரையே எரித்த ஆர்வக்கோளாறுகள் உள்ளனர்.
மேலும் இந்த சம்பவங்களுக்கு பிரதமர் மோடி மன்னிப்புக் கேட்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்ற பெயரில் சங்கிகள் சிலர் அதீத ஆர்வத்தில் தெருக்களில் கூடியது கொரோனா வைரஸ் மீதான அச்சம் மக்களிடையே மேலோங்கியுள்ளது.