இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பைக் கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் பங்குப்பெற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சில இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் கொரோனா வைரஸ் பாதிப்பை இஸ்லாமிடர்கள் பரப்பிவிடுவதாக போலி செய்திகளையும் கட்டுக்கதைகளையும் சமூக வலைதளங்களில் கருத்துகளை வெளியிடத் தொடங்கினார்கள்.
அவர்களின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் என பலரும் பதில் அடிக்கொடுத்துவந்தனர். சமீபத்தில் திரை துறைச் சார்ந்த பலரும் கூட கொரோனாவிற்கு மதசாயம் பூசுவதாக விமர்த்தினர்.
இந்நிலையில் முன்னணி நடிகையாக ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “இந்தியாவில் உள்ள 99.99 சதவீத இந்துக்கள் கோமியம் குடிப்பதில்லை; கோமியம் குடித்தால் கொரோனா குணமாகிவிடும் என நம்புவதுமில்லை.
அதேப்போல், 99.99 சதவீத முஸ்லிம் மக்கள் தப்லீக் ஜமாஅத் நிகழ்வை ஆதரிக்கவில்லை; மவுலானா சாத் சொன்னதையும் ஏற்கவில்லை. இந்த கொரோனா வைரஸ் மதச்சார்பற்றது. அது மதத்திம் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதில்லை; அது சமத்துவத்தை நம்புகிறது.
சாதி, மதம், வசதிகள், அந்தஸ்து என யாராக இருந்தாலும் அவர்களை பாதித்துக் சாகடிக்கிறது. ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு கொரோனாவிற்கு எதிரான இந்த போரில் ஒன்றினைந்து செயல்படுவோம்” என தெரிவித்துள்ளார்.