குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர்சியாக இடைவிடாது ஷாஹீன் பாக்கில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பரவி வரும் கொரோனா அச்சம் காரணமாக நாடுமுழுவதும் நடைபெற்ற குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
ஆனால், டெல்லி ஷாஹீன் பாக்கில் மட்டும் பெண்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. 1000 பெண்கள் கூடி ,க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்ட போராட்டத்தில் தற்போது குறைந்த அளவிலான பெண்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் நடைபெற்று வரும் சுய ஊரடங்கு மத்தியில் போராட்டம் நடைபெறும் இடத்தில் மரம் நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்குவந்த டெல்லி போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தடயவியல் விசாரணை சோதனை செய்துவருகின்றனர்.
பிரதமர் அழைப்பை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட ஆத்திரத்தில் பா.ஜ.க ஆதரவாளர்களோ, இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்களே இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.