உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவையும் பெரும அளவில் பாதித்துள்ளது. கொரோனாவின் தாக்கம் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் இயல்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. குறிப்பாக விமான நிலையங்களில், ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து தடை செய்யப்பட்டு வரும் நிலையில், பயணிகள் ஆங்காங்கே பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்தவகையில், பொதுஇடங்களில் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அப்படி அந்த கருவியில் வெப்ப அளவு அதிகரித்தால் உடனே அந்த நபரை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். இந்த சோதனையின் போது 3 வினாடிக்குள் உடல் வெப்பநிலையைக் காட்டும். இது அனைத்து மருத்துவ குழு அதிகாரிகளுக்கும் கொடுக்கப்பட்டு பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஒரு முக்கிய ரயில்நிலையத்தில் சோதனை செய்ய நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி முறையாக பரிசோதிக்காமல், கொரோனா பற்றி அச்சமில்லாமல் கடமைக்கு என வேலை செய்துள்ளார்.
இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த நபர் இதனை வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அதிகாரியின் அலட்சியத்திற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.