இந்திய பங்குச்சந்தைகள் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்த நிலையில், பங்குச் சந்தை வர்த்தகம் முக்கால் மணி நேரம் நிறுத்திவைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிவைக் கண்டுவரும் நிலையில், கரோனா அச்சத்தால் உளகளாவிய அளவில் பங்குச்சத்தை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3090, புள்ளிகளும் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 966 புள்ளிகளும் சரிந்தது. இது முதலீட்டாளர்களை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 3090 புள்ளிகள் சரிந்து 29,687 புள்ளிகளில் வரத்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 966 புள்ளிகள் சரிந்து 8,624 புள்ளிகளில் வர்த்தகமானது.
நேற்று மும்பை சென்செக்ஸ் 2,919 புள்ளிகள் சரிவடைந்த நிலையில் இன்றும் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்படும் சரிவும் இந்திய பங்குச்சந்தைகள் சரியக் காரணமாக உள்ளது.
வரலாறு காணாத வீழ்ச்சியால் பங்கு விற்பனை 45 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மும்பை, தேசிய பங்குச்சந்தைகள் இரண்டிலும் பங்கு விற்பனை நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 2009ம் ஆண்டுக்குப் பிறகு கடுமையான வீழ்ச்சியால் பங்கு விற்பனைகள் நிறுத்தப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.