மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது தொடங்கி, இந்திய பொருளாதாரம் கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதம் மட்டுமே என்ற நிலையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,320 புள்ளிகள் சரிந்து 35,256ல் வர்த்தகம் ஆகிவருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் நிஃப்டி 645 புள்ளிகள் சரிந்து 10,339ல் வர்த்தகம் ஆகிவருகிறது.
பங்குச் சந்தைகள் வீழ்ச்சி காரணமாக வாடிக்கையாளர்களுக்கு 7.72 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 10% வீழ்ச்சி அடைந்துள்ளன.
இதனிடையே 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை 30% சரிவைக் கண்டுள்ளது. ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக இன்று மேலும் சரிவடைந்துள்ளது. டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.0087 ரூபாய் என்ற அளவில் உள்ளது.