இந்தியா

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிடில் செயலிழப்பு - கடைசி கெடு விதித்து மத்திய அரசு எச்சரிக்கை!

ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு செல்லாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிடில் செயலிழப்பு - கடைசி கெடு விதித்து மத்திய அரசு எச்சரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது.

பின்னர், இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 30 கோடியே 75 லட்சம் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் கார்டுகளின் எண்ணிக்கை 17 கோடியே 58 லட்சமாக உள்ளது.

ஆகையால், வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடைசி கெடு விதித்திருக்கிறது. அவ்வாறு இணைக்காத பான் கார்டுகள், வருமானவரி சட்டத்தின் மூலம், மார்ச் 31க்கு பிறகு உடனடியாக செயலற்றதாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

பான் கார்டு இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் உடனடியாக பெறும் அம்சத்தை வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஏற்கெனவே வைத்திருந்த பான் கார்டு தொலைந்து போனாலோ, சேதமடைந்துவிட்டாலோ அதனை இந்த வசதியின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories