இந்தியா

9 நாளில் 5 முறை மாணவர்களிடம் விசாரணை : தேசதுரோக வழக்கில் சிக்கிய பள்ளிக்கு போலிஸ் தொடர்ந்து நெருக்கடி!

மோடியை விமர்சித்து நாடகம் போடப்பட்டதாகக் கூறி, கர்நாடக பள்ளிக் குழந்தைகளுக்கு விசாரணை என்ற பெயரில் போலிஸார் தொடர்ந்து தொல்லை கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

9 நாளில் 5 முறை மாணவர்களிடம் விசாரணை : தேசதுரோக வழக்கில் சிக்கிய பள்ளிக்கு போலிஸ் தொடர்ந்து நெருக்கடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த பிதார் டவுனில் உள்ள ஷாஹீன் கல்விச் சங்கத்தின் சார்பில் ஷாஹீன் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி ஜனவரி 21-ஆம் தேதி நடைபெற்றது.

ஆண்டுவிழாவின் போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் விதமாக நாடகம் போடப்பட்டுள்ளது. 4-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் பங்கேற்று நடித்த இந்த நாடகத்தில், பிரதமர் மோடியை விமர்சிக்கும் வசனங்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதற்காக, ஷாகீன் பள்ளி நிர்வாகம் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்த போலிஸார், உருது ஆசிரியை பரீதா பேகம் மற்றும் நாடக உரையாடலை எழுதிய 6-ஆம் வகுப்பு குழந்தையின் தாயார் நஜ்புன்னிஷா ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஒன்றுமறியாத குழந்தைகளிடம் போலிஸார் அடிக்கடி விசாரணை நடத்தி தொல்லை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 9 நாட்களில் மட்டும் 5 முறை, போலிஸார் பள்ளிக்கு நேரில் சென்று நாடகத்தில் நடித்த குழந்தைகள் உட்பட 85 குழந்தைகளிடம் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தி உள்ளனர். ஒவ்வொரு முறையும் நாடக உரையாடலில் குறிப்பிட்ட பகுதியை எழுதிக் கொடுத்தது யார்? என திரும்பத் திரும்பக் கேட்டு குழந்தைகளைத் தொந்தரவு செய்துள்ளனர்.

போலிஸாரின் இந்த நடவடிக்கைக்கு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அரசின் நடவடிக்கையை முடித்துக்கொண்டு வழக்கைத் திரும்ப பெறவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories