இந்தியா

பா.ஜ.க அரசின் தோல்வியால் கடனைச் சுமக்கும் இந்திய மக்கள் : தனிநபர் கடன் அதிகரித்ததாக காங். குற்றச்சாட்டு!

பா.ஜ.க அரசின் தோல்விக்காக இந்திய மக்கள் கடனைச் சுமக்க வேண்டுமா? என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கவுரவ் வல்லப் கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க அரசின் தோல்வியால் கடனைச் சுமக்கும் இந்திய மக்கள் : தனிநபர் கடன் அதிகரித்ததாக காங். குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் கடும் சரிவைக் கண்டுள்ளது. அரசின் பொதுத்துறைகளை விற்று மக்களின் வேலைவாய்ப்புகளையும் இந்த அரசாங்கம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 5 1/2 ஆண்டுகளில் நாட்டின் கடன் 71 சதவீதம் அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கவுரவ் வல்லப் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “நாட்டின் கடன் சுமை கடந்த 2014 மார்ச் மாதம் ரூ.53.11 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால் தற்போது ரூ.37.9 லட்சம் கோடி அதிகரித்து ரூ.91.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது 71.36 சதவீத உயர்வு ஆகும்.

பா.ஜ.க அரசின் தோல்வியால் கடனைச் சுமக்கும் இந்திய மக்கள் : தனிநபர் கடன் அதிகரித்ததாக காங். குற்றச்சாட்டு!

அதுமட்டுமின்றி ஒவ்வொரு தனிநபர் மீதான கடன் விகிதாச்சாரம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது இரு மடங்காக அதிகரித்து 10.3 சதவீதமாக உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “நாட்டில் வருமானம், வேலைவாய்ப்பு என எதுவும் உயரவில்லை. ஆனால் இப்படி கடன் உயர்ந்தால் எப்படி அந்தச் சுமையை தாங்கப்போகிறோம்? பா.ஜ.க அரசின் தோல்விக்காக இந்திய மக்கள் இந்தக் கடனைச் சுமக்க வேண்டுமா? பிரதமர் மோடியும், நிதி அமைச்சரும் இந்த பிரச்னைக்கு வரும் பட்ஜெட்டில் தீர்வு காணுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories