மோடியின் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் டெல்லி ஜாமியா பல்கலை, ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்கள், உத்தர பிரதேசத்தில் அலிகார் பல்கலை மாணவர்கள் மற்றும் கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைகளில் ஈடுபட்டனர்.
இதனால் பலர் படுகாயமுற்றும், சிலர் உயிரையும் இழந்தனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. பா.ஜ.கவின் தூண்டுதலின் பேரில் நடைபெற்ற இந்த உயிரிழப்புகளுக்குகாவல்துறையினரே காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் நேற்று டெல்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.
அதில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என அந்த மனுவில் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக பேசிய ராகுல்காந்தி, மக்களை மிருகத்தனமாக கையாள போலிஸை ஏவி வருகிறது பா.ஜ.க. அரசு. சொந்த நாட்டு மக்களயே கொடுமைப்படுத்தும் செயலை எவராலும் மன்னிக்க முடியாது. மனித உரிமைகள் காப்பதற்கான பொருத்தனாம ஆணையம் என்.எஹ்.ஆர்.சிதான் என நம்புகிறோம்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா உள்படவர்களும் அப்போது உடனிருந்தனர்.