நாடுமுழுவதும் 71வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் கலந்துக்கொண்டார்.
அந்த நிகழ்வில் குடியரசு தின நாள் தொடர்பாக பேசிய ஷாரூக்கான், ஒருவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்பதைப் புரிந்துகொள்வதை விட அவரது வீட்டில் ‘இந்தியன்’ என்ற உணர்வோடு இருப்பதுதான் முக்கியமானது.
எங்கள் வீட்டில் நாங்கள் ஒருபோதும் இந்து - முஸ்லீம் என்று பேசியதில்லை. உதாரணமாக எனது மனைவி இந்து, நான் முஸ்லீம், என் குழந்தைகள் இந்தியர்கள்” என்று நிகழ்ச்சியில் ஷாருக் கான் கூறினார்.
மேலும், ”எனது மகள் சுஹானாவின் பள்ளியில் ஒரு படிவம் கொடுத்துள்ளார்கள். அதில் மதத்தை நிரப்பவேண்டும் எனவே நமது மதம் என்ன என்று கேட்டார், அதற்கு எளிதாக, ’நாம் அனைவரும் இந்தியர்கள், எங்களிடம் இல்லை ஒரு மதம்’ என்று கூறினேன்.” என தெரிவித்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நாடுமுழுவதும் நடைபெறும் வரும் வேலையில், இந்தியாவில் இந்து - முஸ்லீம் மக்களிடயே இந்த கருத்துவேறுபாடும் இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் விதமாக ஷாரூக்கானின் பதில் அமைந்ததாக பலரும் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.
மேலும் ஷாரூக்கானின் இந்த பதிவு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்றப்பை பெற்றுள்ளது. பலரும் ஷாரூக்கானுக்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.