இந்தியா

“நான் இருக்கும் வரை உங்களை யாராலும் தொடமுடியாது” : தொண்டர்களுடன் 4 கி.மீ தூரம் பேரணி சென்ற மம்தா!

நான் இருக்கும் வரை யாரும் உங்களைத் தொடத் துணிய மாட்டார்கள் என குடியுரிமைச் சட்ட எதிர்ப்பு பேரணியில் மக்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

“நான் இருக்கும் வரை உங்களை யாராலும் தொடமுடியாது” : தொண்டர்களுடன் 4 கி.மீ தூரம் பேரணி சென்ற மம்தா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க அரசு இந்தச் சட்டம் மூலம் ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற தனது ஆர்.எஸ்.எஸ் கனவை இந்தியாவில் நிறுவ முயற்சிக்கிறது என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக டார்ஜிலிங்கில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றார். இதில் மாநில அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், உள்ளூர் மக்கள் பங்கேற்றனர்.

பேரணியின் போது பேசிய மம்தா பானர்ஜி, “குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். நான் உங்களுடன் இருக்கிறேன்.

நான் இருக்கும் வரை யாரும் உங்களைத் தொடத் துணிய மாட்டார்கள். இது எங்கள் நிலம், இங்கு யாரும் பிரிவினையை உருவாக்க மாட்டார்கள் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்” எனப் பேசினார்.

banner

Related Stories

Related Stories