இந்தியா

#CAA-வுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் : மம்தா பானர்ஜி உறுதி!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

#CAA-வுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் : மம்தா பானர்ஜி உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க கொண்டுவந்த குடியுரிமை சட்டத்தால் இஸ்லாமியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மேலும், பா.ஜ.க அரசு இந்தச் சட்டம் மூலம் ‘இந்து ராஷ்ட்டிரம்’ என்ற தனது ஆர்.எஸ்.எஸ் கனவை இந்தியாவில் நிறுவ முயற்சிக்கிறது என காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில், தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலம் முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். அதுமட்டுமின்றி, சிலிகுரியில் நடைபெறும் போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்த சிலிகுரி புறப்பட்டுச் சென்றார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா பானர்ஜி, “தேசிய மக்கள் பதிவேட்டை மோடி அரசு தற்போது மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானது. இதன் மூலம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்துவதற்கான முயற்சியை பா.ஜ.க அரசு மேற்கொண்டுவருகிறது.

#CAA-வுக்கு எதிராக மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்படும் : மம்தா பானர்ஜி உறுதி!

அதுமட்டுமின்றி, பா.ஜ.க ஆளும் திரிபுரா, அசாம், மணிப்பூர், மற்றும் அருணாச்சலப் பிரதேசம் உட்பட வடகிழக்கு மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவரும் சட்டத்தை முழுமையாக படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாம் இதுகுறித்து முடிவுக்கு வருவதற்கு முன்பு, தேசிய மக்கள் தொகை பதிவேடு படிவத்தில் உள்ள உட்பிரிவு வாக்கியங்களை பார்த்தால், அதில் உள்ள நிபந்தனைகள் மிக மோசமாக உள்ளது என்பது தெரியவரும்.

குறிப்பாக, பெற்றோர் பிறந்த விவரங்கள் கட்டாயமில்லை என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிறது. விவரங்கள் கட்டாயமில்லை என்றபோது ஏன், அந்த விவரங்கள் படிவத்தில் இடம்பெற்றுள்ளன? இதுபோன்ற கேள்விகளுக்கு மத்திய அரசாங்கம் விடை அளிக்கவேண்டும். ஒருவேளை இவை தொடர்ந்து படிவத்தில் இடம்பெற்றால், பெற்றோரின் பிறந்த விவரங்களை குறிப்பிடாதவர்கள் தானாகவே விலக்கப்பட்டு விடுவார்கள்.

அதனால் தான் படிவத்தில் இடம்பெற்றுள்ள இந்த தகவல்களால் அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பங்கேற்காதீர்கள். மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும்” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories