மத ரீதியாக மக்களை பிளவுபடுத்துவது, காவி மயமாக்கல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அக்கட்சியில் அரசமைப்பின் உயர் பதவிகளில் உள்ள பலரும் இதுபோன்ற சர்ச்சைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் குடியரசு துணைத்தலைவராக உள்ள பாஜகவின் வெங்கைய நாயுடு, திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் உள்ள திருவள்ளுவரின் புகைப்படத்தை பகிர்ந்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
இதற்கு தருமபுரி மக்களவைத் தொகுதி தி.மு.க. எம்.பி. செந்தில்குமார் கடும் கண்டனம் தெரிவித்து, தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள திருவள்ளுவர் படத்த வேண்டும். திருவள்ளுவருக்கு மதச்சாயமோ, சாதிச்சாயமோ பூசுவதை தவிர்க்க வேண்டும் என ட்விட்டரில் குறிப்பிட்டு அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து பலதரப்பில் இருந்து வெங்கைய நாயுடுவின் பதிவுக்கு எதிர்ப்பும், கடுமையான விமர்சனங்களும் எழுந்தது.
ஆகையால், காவி உடையில் இருந்த திருவள்ளுவரின் புகைப்படத்துடன் தான் பதிவிட்ட பதிவை நீக்கி புதிய படத்துடன் பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசு துணைத்தலைவர் வெங்கைய நாயுடு.