தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான ADR (Association of Democratic Reforms) பாலியல் வழக்குகளில் தொடர்புடைய எம்.பி எம்.எல்.ஏக்கள் குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது
அதில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் பாஜகவை சேர்ந்த 21 எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சம்மந்தப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது
மேலும், கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 66 பேருக்கு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட பா.ஜ.க., வாய்ப்பளித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, கடந்த 5 ஆண்டுகளில் மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் 572 பேர் போட்டியிட்டனர். ஆனால் இவர்களில் எவருமே தண்டிக்கப்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.