இந்தியா

எதிர்ப்புகளை மீறி புதிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த பாஜக அரசு முயற்சி!

கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்காமல் புதிய கல்விக்கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்ப்புகளை மீறி புதிய கல்விக் கொள்கையை விரைவில் அமல்படுத்த பாஜக அரசு முயற்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புதிய கல்விக்கொள்கை விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளர் ஆர்.சுப்பிரமணியன், தேசிய கல்விக்கொள்கை திட்டத்துக்கு இறுதிவடிவம் கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என்றும் இந்த கல்வி முறை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது என்றும் கூறியுள்ளார்..

ஆர்.சுப்பிரமணியன்
ஆர்.சுப்பிரமணியன்

இதனிடையே மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சி என்றும் ஏழை எளிய குழந்தைகள் கல்வியை தொடர முடியாத சூழலை ஏற்படுத்தும் என்றும் கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கருத்துகளை ஏற்காமல் அரசு உதாசினப்படுத்தி வருகிறது என அரசியல் கட்சித் தலைவர்கள் தரப்பில் கண்டனமும் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories